தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒப்பேகொட பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (11.12.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கண்டி, பிலிமதலாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 53 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து, சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட புத்தர் சிலையுடன் தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here