கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்ததாவது, தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என்றும், இவ் விடயத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை நிறைவடைந்ததும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், விண்ணப்பதாரர்களின் வயதெல்லையை நீட்டித்து, ஆசிரியர் சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








