இந்தியா, திருச்சி மாவட்டம், விசுவாம்பாள் சமுத்திரம் தெருவில் நேற்று வியாழக்கிழமை(15) இரவு 10 மணியளவில் விவசாயம் செய்யும் பாலசுப்ரமணியன் என்பவர் கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதவற்காக வீட்டின் தாழ்வார பகுதிக்குச் சென்றவர், அங்கே மலைப்பாம்பொன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
தீயணைப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில் அங்கே விரைந்து சென்றவர்கள், பதுங்கியிருந்த 12 அடி நீளமான மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அண்மைக் காலமாக பெய்து வரும் கன மழையின் காரணமாக இந்த மலைப்பாம்பு நீரில் அடித்து வந்திருக்கலாம் எனவும் தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்றுகளை தீண்ட வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.








