நாரஹேன்பிட்டி தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் நேற்று (17)  நடைபெற இருந்த தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கலந்துரையாடல், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கலந்து கொள்ளாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் சமீபத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ரூ.1,350 இலிருந்து ரூ.1,700 ஆக உயர்த்த தீர்மானித்திருந்தது. இதற்கான நடைமுறைகளை உறுதிசெய்யும் நோக்கில் வேதன நிர்ணய சபையுடன் நேற்று முக்கியமான கலந்துரையாடல் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பங்கேற்பின்மை குறித்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது “நாட்டின் சட்டத்தையும், தொழிலாளர் உரிமைகளையும் அவமதிக்கும் செயல்” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, கடந்த 14 ஆம் தேதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், தோட்டத் தொழிலாளர்களுக்கு “வாழ்க்கை ஏற்ற வேதனம் வழங்கப்பட வேண்டியது அவசியம்” என வலியுறுத்தியிருந்தார்

புதிய தேதியில் கலந்துரையாடலை மீண்டும் நடத்துவது குறித்து தொழிலாளர் அமைச்சகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here