Johannesburg, 01-10-18 A petrol attendant fills up a car at a BP service station before South Africans face another national fuel hike. Picture: Karen Sandison/African News Agency(ANA)

விலை அதிகரிப்புக்குப் பிறகும், ஒவ்வொரு லீட்டர் எரிபொருளிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

டீசலின் விலை ரூ. 536 ஆக காணப்படுகிற நிலையில் ரூ. 407-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் ரூ. 29 இழப்பு ஏற்படுகிறது.

பெட்ரோல் சுமார் 60 ரூபாவிற்கும் மேற்பட்ட இழப்பில் விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு அரசாங்கம் ரூ. 57 பில்லியன் மானியம் வழங்கியது. அந்த மானியம் ஜூன் மாத இறுதியுடன் முடிவடைவதால் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல எரிபொருள் இறக்குமதி கடந்த மாதம் $522 மில்லியனாக அதிகரித்துள்ளது, இதற்கு முன்பு இந்த தொகை $100-120 மில்லியனாக காணப்பட்டது. இவ்வாறு அதிகப்படியான டொலர்கள் வெளியேறுவதால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கமைய கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் அமைச்சு சகல எரிபொருள் நிலையங்களிலும் கியூஆர் குறியீடு பயன்பாட்டைக் கண்காணிக்கும். எரிபொருள் விற்பனையாளர்கள் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் முறையை பின்பற்றப்படாவிட்டால், அவர்களுக்கான விசேட தொகை (கமிஷன்) குறைக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here