வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகத்தை பாரம்பரிய முறைப்படி மாட்டுவட்டியில் ஏற்றி கோவில் வீதிவழியாழ் நல்லூரன் தெற்கு வாசல் வளைவினை அடைந்து தைப்பூச நன்நாளான நேற்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நெல்மணிகள் நிரப்பபட்ட பெட்டகம் நல்லூர் ஆலயத்தினை அடைந்து ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக மேற்படி வளைவு அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here