2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு வருவாய்த் துறை பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

துறையின் அறிவிப்பின்படி, குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டின் கீழ் வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் தங்கள் வரி அறிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை, காலக்கெடுவை மீறுவோர் மீது 2017 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, 1944 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவோ, www.ird.gov.lk என்ற இணையதளத்தை பார்வையிடவோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வருவாய்த் துறை பிராந்திய அலுவலகத்தை தொடர்புகொள்ளவோ முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here