தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் நாகர்ஜூனா.
இதனை தொடர்ந்து தற்போது திருமண ஏற்பாடுகளும் தொடங்கியிருந்தது.
திருமண கொண்டாட்டம் வீட்டில் தொடங்கி இருக்கும் ஸ்டில்களை தற்போது சோபிதா வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
















