முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவருக்கு கடந்த 10ஆம் திகதி வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அமைச்சருக்கு குருநாகல் பொலிஸார் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரவில்லை. என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here