நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

இறங்குதுறைப் பகுதியில் வான்தோண்டும் பணிகள் பூர்த்தியான நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேற்படி பகுதியை வான்தோண்டி தருமாறு கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதேச கடற்றொழிலாளர்களினால் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் முன்று மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப் பட்டிருந்தது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(யாழ் நிருபர் –லோயன் விஜய்குமார்)






