இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டின் 33 ஆவது வாரம் வரை 35,118 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 30,575 வழக்குகளை விடவும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரம் மாத்திரம் 968 சந்தேகத்திற்கிடமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நோயால் மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாடு தழுவிய மொத்த வழக்குகளில் 51.3 விகித அதிகரிப்பாகும்.

நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டோரில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், 15 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள வலயங்களாகக் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கோடிட்டுள்ளது.

நாவலப்பிட்டி, ஹரிஸ்பத்துவ, கொலன்னாவ, மற்றும் மஹர போன்ற புதிதாக அடையாளம் காணப்பட்ட அபாய இடங்களை விட முன்னர் குறிப்பிடப்பட்ட கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வழக்குகளின் அதிகரிப்பைக் காட்டுகின்றன.

கொழும்பு, இரத்தினபுரி, காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் கொழும்பு தெற்கு ஆகியனவும் இந்த பட்டியலில் அடங்குகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் வியத்தகு முறையில் 133 வழக்குகள்பதிவாகியுள்ளன. அதே வேளையில் கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட வட மாகாணத்தின் பிற பகுதிகளிலும் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், டெங்கு பாதிப்பு அதிகரிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here