உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலன்ஸ்கியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கெய்வில் இடம்பெற்ற நிலையில் இதன் போது புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படத்தை ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து “இந்தியா – உக்ரெய்ன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ‘லைக்ஸ்’களைப் பெற்றது. இது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் சாதனையாக மாறியுள்ளது.

இதற்கு முன்னர் அதிகபட்சமாக அவர் 7.8 லட்சம் லைக்ஸ்களையேப் பெற்றிருந்தார். தற்போது மோடியுடனான புகைப்படம் அதனை முறியடித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here