நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் (02.12.2024) சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டம் வரை உயர்வடையக் கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.

தற்போதைய காலநிலை மற்றும் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து வரும் காற்றின் தன்மைக்கமைய, காற்றின் தரச்சுட்டெண் 86 முதல் 120 வரையான மட்டத்தில் இன்றைய தினம் நிலவக்கூடும்.

எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வவுனியா, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் இன்றைய தினம் காற்று தரச்சுட்டெண் மத்திம மட்டத்தில் நிலவும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here