Tuesday, April 21, 2026
No menu items!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை  மண்சரிவு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை தொடர்ச்சியாக மோசமாக இருந்தால், இந்த மாவட்டங்களில்...

மண்சரிவு எச்சரிக்கை- மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களுக்கு  நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு!

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆறு மாவட்டங்களுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (19) முதலாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுவிப்பு!

நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை, இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24...

மிதமான நிலையில் காணப்படும் காற்றின் தரம்!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம், காலி, குருநாகல், காலி, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், காற்றின் தரம் இன்று (03) 26 தொடக்கம் 56க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், நாடு...

ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் காற்றின் தரம்!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 52 முதல் 112 ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும்...

மோசமான மட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம்..!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்றைய தினம் சற்று மோசமான மட்டத்தில் நிலவக்கூடும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் நாடு முழுவதும் காற்றின் தரச் சுட்டெண் 64 முதல் 116 வரை காணப்படக்கூடும் என எதிர்வு...

பொது மக்களுக்கு முகக் கவசங்களை அணிய அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும். இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்...

நாட்டில் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை !

நாட்டின் பல நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் காற்று மாசுபாட்டின்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img