நாட்டின் பல பகுதிகளில் இன்று (3/31/2025) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.








