நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய வேலைத்திட்டம் இல்லாததால் வெறிநாய் நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டமும் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு மற்றும் பொது இடங்கள் முழுவதும் ஏராளமான நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் தற்போது பாரிய சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கடந்த ஆண்டு இலங்கையில் தெருநாய்கள் கடித்து 16 பேர் உயிரிழந்துள்ளதனையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலைமையை முறையாகக் கட்டுப்படுத்த விஞ்ஞான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here