இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவிலிருந்து 11,749 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 11,629 சுற்றுலாப் பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதுதவிர, பிரித்தானியா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.








