இலங்கை விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் பணமோசடி தொடர்பில் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தேக நபராக பெயரிடப்பட வேண்டும் என சட்டமா அதிபர் இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களை அடுத்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 04 அன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

சர்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்தின் போது 800,000 அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here