இலங்கை முஸ்லிம் கொங்கிரசின் (SLMC) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் வழங்கிய ராஜினாமா, பாராளுமன்ற பதில் பொதுச் செயலாளர் ஹன்ச அபேரத்னவால் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக, 10ஆவது பாராளுமன்றத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின்படி, இந்த விடயம் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






