பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்திற்கு (IPU), பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்திற்கு (CPA) மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகருக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க முயன்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படாமை மற்றும் அதற்கு தடை விதிக்கப்பட்டமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.








