ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இம்மாதம் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அவரது பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.







