ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வேன் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா பகுதியைச் சேர்ந்த குணசேகரம் திவ்யா என்ற 37 வயதுடைய பெண் ஆவார்.

இந்த விபத்து இன்று (19) காலை ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்து தொடர்பில் வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here