2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பின்னர் விரைவில் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதனை இன்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் திருத்தம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சகத்தினால் அமைச்சினால், சுகாதாரம் மற்றும் ஊடகம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை திருத்துவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தை மூன்று அமைச்சுக்களும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையிலேயே பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்றுவரை, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யாரும் கைது செய்யப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை என்று அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here