நிலச்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்கள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (22) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை நிலை 3 – (வெளியேறவும்)

கண்டி மாவட்டம் – பஸ்பாகே கோரளை நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, நோர்வூட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு

எச்சரிக்கை நிலை 2 – (அவதானமாக இருக்கவும்)

கொழும்பு மாவட்டம் – பாதுக்க

காலி மாவட்டம் – தவளம, நாகொட, நெலுவ

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம் – உடபலாத்த, கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம் – தெரணியகல, யட்டியந்தோட்டை, மாவனெல்லை, தெஹிஓவிட்ட, அரநாயக்க

நுவரெலியா மாவட்டம் – தலவாக்கலை

இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருக்கவும்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்க

காலி மாவட்டம் – நியாகம, பத்தேகம

கேகாலை மாவட்டம் – வரகாபொல, கேகாலை, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல

கம்பஹா மாவட்டம் – மீரிகம, அத்தனகல்ல

கண்டி மாவட்டம் – பாததும்பர, யட்டிநுவர, தொலுவ, உடுநுவர

குருநாகல் மாவட்டம் – அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவபிட்டிய

மாத்தறை மாவட்டம் – கொட்டபொல, அக்குரெஸ்ஸ, அதுரலிய, பிடபெத்தர

இரத்தினபுரி மாவட்டம் – கலவான, எலபாத்த, அயகம, பெல்மதுள்ளை, நிவித்திகல, குருவிட்ட

களுத்துறை மாவட்டம் – அகலவத்த, பாலிந்தநுவர, புலத்சிங்கள, இங்கிரிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here