ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக 15 பிரதிவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு நிரந்தர மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று (22) உத்தரவு பிறப்பித்தது.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறித்த தீர்ப்புகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய குறித்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 09 பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.








