அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சமூக மற்றும் சமாதான நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சோபித ராஜ கருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்ட போதே  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன மீது வழக்கு தொடரப்பட்டது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here