மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியேறிய குற்றச்சாட்டில், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப் பயன்படுத்திய காரின் உரிமையாளரையும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட பின்னர், தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறி, சட்டமா அதிபர் நேற்று (21/04/2025) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.








