நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (22/1/2025) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இ-விசா வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் கடந்த செப்டெம்பர் மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹர்ஷ இலுக் பிட்டிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here