Sunday, April 26, 2026
No menu items!

சிறைச்சாலை அதிகாரி

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி..!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (5/26/2025) உத்தரவு பிறப்பித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து செல்லப்பட்டார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காகவே...

மஹிந்தானந்த அலுத்கமகே நீதிமன்று முன்னிலையில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (26) இடம்பெறவுள்ள நிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மீண்டும் நீதிமன்ற முன்னிலையில் சாமர சம்பத் தசநாயக்க !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (08) சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2016 ஆம் ஆண்டு, ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ரூ. 1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கைது...

வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு சிறையில் அடம்பிடிக்கும் தேசபந்து..!

தும்பர சிறைச்சாலை அதிகாரிகளிடம், வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இக்கோரிக்கை பெரும்பாலும் நிறைவேற்றப்படுமென தெரிவிக்கப்படுகிறது நியாயமான காரணங்களை வழங்கி, தடுப்புக் கைதிகள் வெளியில் இருந்து உணவு கோர உரிமை உண்டு என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வெலிகம ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் ஒருவர் பலியானார். இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு உந்துருளிகளும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர் கடந்த வருடம்...

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஹர்ஷ இலுக் பிட்டிய..!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (22/1/2025) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இ-விசா வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும்...

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி இன்று நீதிமன்றின் முன்னிலையில்!

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று (07) நுகேகொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 31ஆம் திகதி, மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு...

நான்கு கைதிகள் தப்பியோட்டம்; சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம்…!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் கடந்த 1 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். போதைப்பொருள் கடத்தல்கள், திருட்டு...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img