காலி நெலுவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற போதே இந்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில்மூழ்கிக் காணாமல் போன மாணவனைத் தேடி குழுவொன்று காலி கடற்படைத் தளத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற போதே இந்த மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக ஜின் கங்கையில் நீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.








