முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில், மாணவிகள் இருவர் புகைப்படம் எடுக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற மூன்று மாணவிகள் நேற்று (01) மதியம் முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு சென்றுள்ளனர்.

மூவரும் கேணியில் இருந்தபோது இருவர் நீரில் இறங்கி இருக்க மற்றவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

திடீரென இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் மற்றைய யுவதி அவர்களை காப்பாற்ற முயன்று அது பயனற்றுப் போக குறித்த யுவதி அயலவர்களை அழைத்து அவர்களை மீட்டுள்ளார்.

பின் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here