பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பாகற்காய் என்றாலே அலர்ஜி. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் கசப்புத்தன்மை தான்.
ஆனால் கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக பாகற்காயில் சாரோகின் என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகவும், அருமருந்தாகவும் பாகற்காய் விளங்குகின்றது.

அதுமட்டுமன்றி பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், எடையை குறைக்க வேண்டும் என போராடுபவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
மேலும் பாகற்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்குவதுடன், இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பதவும் பெரிதும் துணைப்புரிகின்றது.








