கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி மாளிகைக்காடு றபீக் ஹோட்டலுக்கு முன்பாக நேற்று (29/1/2025) இடம் பெற்ற பாரிய மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சம்மாந்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் இருவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன.

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[நிருபர் – முஹம்மத் மர்ஷாத்]







