நெல்லுக்கான உத்தேச விலை உடனடியாக நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – பன்னேகமுவ பிரதேசத்தில் உள்ள சதொச அரிசி களஞ்சியசாலை மற்றும் ஆலையை நேற்று அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, நெல் களஞ்சியசாலைகளை சீர்செய்வதற்கு பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரிசி சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்தவும் கலந்துகொண்டார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் நிதி அமைச்சினால் நடத்தப்படும் அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ உபுல்தெனிய தானிய களஞ்சியசாலைகளை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் திட்டம் குறித்து விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இங்கு சுமார் 5000 மெற்றிக் தொன் அரிசியை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here