குருணாகல் – நீர்கொழும்பு வீதியில் கலுகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (08.09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பயணிகளை ஏற்றுவதற்காக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றைக் கடந்து செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த சொகுசு பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here