இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பங்களாதேசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் அதன் பின்னர் புதிய தேர்தல் இடம்பெறும் என பங்களாதேசின் இராணுவதளபதி அறிவித்திருந்த நிலையிலேயே மாணவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

இதனடிப்படையில் இராணுவம் தலைமைவகிக்கும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நோபல்பரிசுபெற்ற முகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலேசகாராக நியமிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here