பங்களாதேஷில் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 பேர் வரை கொல்லப்பட்டும் மேலும் ஏராளமானோர் காயமடைந்துமுள்ளனர்.

தெருக்களில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டாக்கா மற்றும் வடக்கு மாவட்டங்களான போகுரா, பாப்னா மற்றும் ரங்பூரிலும், மேற்கில் மகுராவிலும், கிழக்கில் கொமிலாவிலும், தெற்கில் பாரிசல் மற்றும் ஃபெனியிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here