பங்களாதேஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம்(05.08) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை ஆக்கிரமித்து அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இந்நிலையில், நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்தை அகற்றியுள்ளனர்.






