சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மாத்தறையில் உள்ள பிரவுன்ஸ் ஹில்லில் காணி கொள்வனவு செய்வதற்காக பசில் ராஜபக்ச சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததையடுத்து, நீதவான் இந்தப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here