கடந்த சில நாட்களாக கணிசமாக மதிப்பிழந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகராக சற்று வலுப்பெற்றுள்ளன . எனினும், விற்பனை விகிதம் ரூ. 350-க்கு மேல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 342.75 மற்றும் ரூ. 354.75 என்ற அளவில் மாற்றமின்றி உள்ளன.
என்.டி.பி வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 344-லிருந்து ரூ. 341 ஆகவும், ரூ. 354-லிருந்து ரூ. 351 ஆகவும் சற்று குறைவடைந்துள்ளன.
மக்கள் வங்கியின் அறிக்கைக்கமைய, அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 344.44-லிருந்து ரூ. 343.95 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 354.74-லிருந்து ரூ. 354.24 ஆகவும் குறைந்துள்ளது.
இதற்கிடையில், கமெர்சியல் வங்கியில், டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 343.09 மற்றும் ரூ. 354.25 என்ற அளவில் மாற்றமின்றி உள்ளன.
சம்பத் வங்கியில், டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 344.50-லிருந்து ரூ. 343.50 ஆகவும், ரூ. 353.50-லிருந்து ரூ. 352.50 ஆகவும் சற்று குறைந்துள்ளன.








