முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி, ஊவா மாகாண சபை தேர்தலின் போது 12,000 டி-சர்ட் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனூடாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்தது.
இந்த நிலையில்.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை குற்ற புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்து பிரிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.








