முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஆடம்பர ஹோட்டலில் பாணந்துறை வளான  ஊழல் தடுப்பு அதிரடி படையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஹோட்டலில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடிப்படையாக கொண்டு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல்ல, மற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தலைமையில் பெண் அதிகாரிகள் உட்பட 55 பொலிஸார் பங்கேற்றனர் என கூறப்பட்டுள்ளது.

4 மாடி கொண்ட குறித்த ஹோட்டலில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சோதனை இடம்பெற்றதாகவும் துப்பாக்கிகளோ சந்தேகத்துக்குரிய பொருட்களோ  மீட்கப்படவில்லை என பொலிஸார் உறுதி செய்தனர் எனவும் லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஹோட்டல் முகாமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here