பெருங்காயம் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும்.

பெருங்காயம் கட்டியாகவோ அல்லது தூளாகவோ கிடைக்கும். சரியான அளவில் பயன்படுத்தாவிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும்.

செரிமானம்

பெருங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. வயிறு வலி, இரைப்பை அழற்சி, வீக்கம், வாயுப் பிரச்சினை ஆகியவற்றை சரி செய்வதோடு தொற்று ஏற்படும் வாய்ப்புக்களையும் குறைக்கிறது.

வாயுப் பிரச்சினை

பெருங்காயத்தில் இருக்கும் கார்மினேடிவ், ஆன்டி ஃப்ளாட்டுலண்ட் பண்புகள் வாயுப் பிரச்சினைக்கு தீர்வாகிறது.

குடல் அழற்சி

இதில் அடங்கியுள்ள ஒட்சிசனேற்ற அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இரைப்பை புண்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

கக்குவான் இருமல்

பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் பெருங்காயத்தில் அதிகம் உள்ளது. அத்துடன் சளி, இருமல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

ஆஸ்துமா

மூச்சுக்குழாயிலுள்ள ஹிஸ்டமைன் ஏற்பிகளை தடுக்க உதவுகிறது. இதனால் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here