பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதேச மற்றும் நகர சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சுமார் 2000 பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

உணவு தயாரிக்கும் நிறுவனங்களை சோதனை செய்தல், சட்ட நடவடிக்கை எடுத்தல், எச்சரிக்கை வழங்குதல் மற்றும் தெளிவூட்டுதல் போன்ற பணிகள் இவர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக கேக், பிஸ்கட்  வகைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் லேபல்களில் (தயாரிப்பு திகதி) ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது குறித்து சுகாதார பரிசோதனை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களின் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் பரிசோதனை நடவடிக்கையின் போது உணவு சட்டத்தின் கீழ் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து சிறைத் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here