வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு ஊடாக நாட்டுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (10) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பிரேரணைக்கு கூட்டு எதிரணி முழுமையான ஆதரவை அளித்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தனவிடம் கையளிக்கப்பட்டதோடு வலுசக்தி அமைச்சரை பதவியில் இருந்து விலகுமாறு எதிரணியினர் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here