பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (10.11.2024) காலை படலபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,  மற்ற எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து விபத்துக்குள்ளான போது, ​​வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து விபத்துக்குள்ளான வேளையில் இங்கு சுமார் 30 பேர் பயணித்ததாகவும், தினமும் பயணிக்கும் இந்த பேருந்தில் பாடசாலை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என பலரும் பயணித்ததாகவும், ஆனால் இன்று (10.11.2024) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here