கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பராட்டே சட்ட அமுலாக்கத் தடை, நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெற்ற சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு, இடைநிறுத்தப்பட்ட தடை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 25 முதல் 50 மில்லியன் ரூபாய் வரையில் கடன் பெற்ற சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையிலும், 50 மில்லியன் ரூபாவிற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கான தடை 2025 ஜூன் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here