கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  5 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here