வடகீழ் பெயர்ச்சி பருவமழை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பருவமழையின் போது ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ் -முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மாவட்டத்திலுள்ள  திணைக்களங்களின் தலைவர்கள்,இராணுவம், பொலிஸார்,  தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here