களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொலம்புவ பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், களனி கங்கையின் நீர்மட்டமானது கிளென்கோர்ஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது.

அதேநேரம், நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தல்கஹகொட பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் நாவலப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

அதேநேரம், மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மனம்பிட்டிய பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யான் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொரவப்பொத்தானை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், மா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், யக்காவௌ பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் மொரகஸ்வௌ பகுதியிலும், மஹா ஓயாவின் நீர்மட்டம் படல்கம பகுதியிலும் அதிகரித்துவருகிறது.

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் தந்திரிமலை பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தெதுரு ஓயா, ராஜாங்கனை, கவுடுல்ல, யான் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறப்பு வீதம் அதிகரிக்ககூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பல பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here